ஜெயம் ரவி- ஹன்சிகா நடிப்பில் திரையில் வெற்றி நடை போடும் படம் ரோமியோ ஜுலியட். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வர, இதில் இடம்பெற்ற ‘டண்டனக்கா’ பாடல் மிகவும் பிரபலம்.
ஆனால், இப்பாடலில் டி.ஆர் அவர்களை கிண்டல் செய்ததாக, அந்த படத்திலிருந்து பாடலை நீக்க கோரி நீதிமன்றத்தில் டி.ஆர் தரப்பில் வழக்கு கொடுத்தனர்.
பிறகு அவரே சமாதானமாகி அந்த பாடலை அனுமதித்தார். எப்படி அந்த பாடலை அனுமதித்தேன் என ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.
இவர் கூறுகையில்;
‘அந்த படத்தின் இயக்குனர் என்னுடைய ரசிகர் என்று கூறினார், மேலும் படத்தில் ரவியும் என்னுடைய ரசிகராக தான் வந்தார், உங்களுக்கு பிரச்சனை என்றால் அந்த பாடலையே படத்திலிருந்து நீக்க ரெடி என்றார், ஒரு தயாரிப்பாளரின் வலி எனக்கு தெரியும், அதனால் தான் நான் அதை செய்யவில்லை’ என கூறினார்.(ந)
