கல்முனைக்குடி அல்-மஸ்துல் நூராணியா தைக்கா பள்ளிவாசலுக்கு அல்-குர்ஆன் பிரதிகள்



எம்.எம்.ஜபீர்-

ல்முனைக்குடி அல்-மஸ்துல் நூராணியா தைக்கா பள்ளிவாசலுக்கு எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு மத்ரஸா மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

அல்-மஸ்துல் நூராணியா தைக்கா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் இமாம், மௌலவி மார்கள், மாணவர்கள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொணடனர்.

இதேவேளை புனித ரமழானை முன்னிட்டு பள்ளிவாசலுக்கு புனர்நிர்மானத்திற்கு கூரைகள் வழங்கப்பட்டதாகவும் இதற்கு அல்-மஸ்துல் நூராணியா தைக்கா பள்ளிவாசல் நிர்வாகம் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரிற்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -