எம்.எம்ஜபீர்-

இறக்காமம் பிரதேசத்தில் நீண்டகாலமாககாணப்படும் வில்லுக் குளத்தை புனர்நிர்மாணம் செய்துசிறுவர் பூங்காமற்றும் குளக்கரை மைதானம் விஸ்தரிக்கப்பட்டு பார்வையாளர் அரங்கு என்பவற்றை அமைத்து தருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் பிரதேசமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.இதனையடுத்து நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இறக்காமம் பிரதேசத்திற்கு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று குறித்த பிரதேசத்தை பர்வையிட்டனர்.
தற்போதை அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு பலமான அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனைகொண்டு அனைத்து பிரதேசங்களையும், நகரங்களையும் அபிவிருத்திசெய்வதற்கான திட்டங்கள் ஒரு சிலவாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இப்பிரதேச மக்களினதும், இளைஞர்களினதும் நீண்டகால தேவைகளைகவனத்தில் கொண்டுவிரைவில் அமைச்சரினால் இதற்கானவேலைத்திட்டங்கள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் பிரதேசமக்களிடம் தெரிவித்தார்.
