சுற்றுச்சூழலை அசுத்தப்படுத்துவோருக்கு எதிராக சட்டவடிக்கை -அமைச்சர் ஹக்கீம்

கொழும்பு நகரிலும், சூழவுள்ள பிரதேசங்களிலும் பூங்காக்களையும், பொழுதுபோக்கு இடங்களையும், நீர் நிலைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்வது சம்பந்தமாகவும், அவற்றை அசுத்தப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் நகர அபிவிருத்தி சபை, இலங்கை காணி மீட்பு அபிவருத்தி கூட்டுத்தாபனம், மாநகர சபைகள் உட்பட பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்களின் உயரதிகாரிகள், முப்படையினர், சுற்றாடல் பொலீஸ் உயரதிகாரிகள் ஆகியோருடன் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மீண்டுமொரு கலந்துரையாடலை செவ்வாய்கிழமை (09) தமது அமைச்சில் நடாத்தினார். அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி, மேலதிகச் செயலாளர் பொறியியலாளர் பீ.சுரேஷ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நயன மாவில்மட ஆகியோரும் பங்குபற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -