டிப்ளோமா கல்வியைப் பூர்த்தி செய்த பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு டிப்ளோமாச் சான்றிதழ்







ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

கிழக்கு மாகாணக் கல்வியமைச்சும், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகமும் இணைந்து நடாத்திய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒரு வருட டிப்ளோமா பயிற்சியைப் பூர்த்தி செய்த ஆசிரியைகளுக்கு டிப்ளோமாச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (09) சாய்ந்தமருது லீ மிர்டியன் ஹோட்டலில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எம்.இராஜேஸ்வரன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், பிரதேச செயலாளர்களான ஏ.எம்.மன்சூர், திருமதி.றிபா உம்மா ஜலீல், அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலைப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் உட்பட பெருந்தொகையான கல்வியலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டத்திலுள்ள 150 தமிழ், முஸ்லிம், சிங்கள பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இங்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்: ' நல்ல காலம் ஜனவரிக்குப் பிற்பாடு ஒரு நல்லாட்சி ஏற்பட்டிரா விட்டால் நாமின்று இந்த இடத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றாய், ஒற்றுமையாய் சேர்ந்திருக்க முடியாது. 

இவ்வாறான ஒரு நல்ல நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்திருக்கமாட்டாது. ஏனனில் கடந்த ஆட்சியாளர்கள் எம்மையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்கள் நினைத்தபடி கொடுமைகளைத்தான் செய்தார்கள். அந்தக் கொடுமையான ஆட்சியளர்கள் நாம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பொய்களையே சொல்லி மக்களை ஏமாற்றினர். முன்னைய ஆட்சியின் போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 3000ரூபாய் தருவோம் என்றனர். 3ரூபாயும் கிடைக்கவில்லை. தற்போது இந்த நல்லாட்சியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஒரு ஆட்சியை நிறுவியுள்ளோம். இதன் மூலம் நல்லவைகளைச் செய்யவுள்ளோம்' எனத் தெரிவித்தார்.

மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி கருத்துத் தெரிவிக்கையில்: 'வட மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களைத் தங்களுடைய பிடிக்குள், அல்லது தங்களது ஆளுகைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு அரசியல் தேவையின் நிமித்தம் அவர்களுக்கு ஒரு வேதனம் வழங்கப்பட்டு வருகிறது. ஏதோ வேதனம் வழங்கப்படுவது பாராட்டத்தக்கதாகும்.' ஏனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -