இளைஞர்கள் என்பவர்கள் இந்நாட்டின் தேசிய சொத்து என்பதனை நாம் நன்கு புரிந்து செயற்படுகின்றோம். கோறளைப்பற்று மேற்கு இக்பால் இளைஞர் கழகத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவிப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் இக்பால் இளைஞர் கழகத்தின் கல்வி, பயிற்சி மற்றும் தொழில் பிரிவின் இவ்வாண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் 'நல்ல நூற்கள் நல்ல நண்பர்கள்' எனும் 2ஆம் கட்ட விஷேட வேலைத்திட்டம் கழகத்தின் செயலாளர்; எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கோறளைப்பற்று மேற்கு இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் அவர்களின் வழிகாட்டுதலில் இடம் பெற்று வரும் இளைஞர் நல வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இக்பால் இளைஞர் கழகம் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதனை சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதியமைச்சரின் மட்டு பிராந்திய காரியாலயத்தில் இடம் பெற்றது.
இதன் போது கிழக்கு பிராத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அமைப்பாளர் அன்வர் ஏ.முஸ்தபா,கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் ஆகியோருக்கும் நூட்கள் இளைஞர் சேவை அதிகாரியினாலும் கழகத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களினாலும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த கழகத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் ' இளைஞர்கள் என்பவர்கள் இந்நாட்டின் தேசிய சொத்து இளைஞர்கள் விளையாட்டுடன் மாத்திரம் தான் பின்னிப்பினைத்துள்ளார்கள் என பலர் நினைத்து கொண்டும் இளைஞர்களை ஆபத்தானவர்களாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். சமூக பொறுப்புக்களை இளைஞர்களுக்கு வழங்குவதில் தயக்கம் செலுத்துகின்றனர்.
எமது இளைஞர் கழகத்தின் உறுதியுரைக்கமைவாக ஒற்றுமை,நட்பு, ஒத்துழைப்பு, அபிவிருத்தி ஆகிய நான்கு பிரமாணங்களுக்கமைவாக இளைஞர் தேசிய கொள்கைகளுக்கமைவாகவும் எமது மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு ஏணைய கழகங்களுக்கு முன்மாதிரியாக மிளிர்வதே எமது நோக்கம் என தெரிவித்தார்.
பிரதியமைச்சர் அமீர் அலி இதன் போது இக்பால் இளைஞர் கழகத்தின் இளைஞர் நல வேலைத்திட்டங்களை பாராட்டியதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் நல வேலைத்திட்டங்களை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்ல தாம் முழு உதவியினையும்,ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக குறிப்பிட்டார்.


