மஹிந்தவின் அரசியல் சரிவு - சுனில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், பிரதமர் பதவியை வழங்க மறுத்த நபரிடமே பிரதமர் பதவியை கோரும் அரசியல் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனை அரசியல் அனர்த்தமாகவே நான் கருதுகிறேன். மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் போது, பிரதமர் பதவிக்கு சந்தர்ப்பம் வழங்காத நபரிடமே தற்போது பிரதமர் பதவியை கோருகிறார்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தகுதியை தருமாறு கேட்கும் அளவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு அரசியலில் சரிவு ஏற்பட்டது.

அதிகாரமே இதற்கு காரணம், அதிகாரம் இன்றி இருப்பில்லை என்பதே இதற்கு காரணம் எனவும் சுனில் அந்துன்நெத்தி கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -