எம்.ஜே.எம்.சஜீத்-
இவ்வருட பொசன் தினத்தை முன்னிட்டு அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமில் அவர்களினால் மாபெரும் சவ்வரிசி கஞ்சி அன்னதானம் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வீதி முன்பாக பயனம் செய்கின்ற பொது மக்களுக்கு சவ்வரிசி கஞ்சி அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச்.கே.பி. மகாகேதர அவர்களினால் பொசன் வெளிச்ச கூடு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு அக்கறைப்பற்று சிறி விஜேயராம விகாராதிபதி தேவகொட சோதர ஹிமி, அக்கறைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி. ஹெமந்த, மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும்; பொதுமக்களும் கலந்து கொண்டனர்.







