அட்டாளைச்சேனையில் உலக புகைத்தல் எதிர்ப்பு தின நிகழ்வு!

எம்.ஜே.எம்.சஜீத்-

ந்த நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானமாக இடம் பெற்று வருகின்ற நிலையில் போதை வஸ்து மற்றும் புகைபிடிப்பு போன்ற கொடிய பயங்கரமான சூழல் நிறைந்து காணப்படுகிறது. 

இவைகளை ஒழிப்பதற்கு பொதுமக்களும் மாணவர்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். ஹனிபா தெரிவித்தார்.

புகைத்தல் மற்றும் போதைவஸ்து போன்றவைகளை ஒழிக்கும் நோக்குடன் வருடா வருடம் புகைத்தல் ஒழிப்பு தினம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனையிட்டு அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் சமூக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டி. சமந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்கன்டவாறு தெரிவித்தார்.

இவ்விழிப்புனர்வு ஊர்வலம் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இருந்து பிரதேச செயலகம் வரை சென்று போதைவஸ்து பொருட்கள் தீ வைத்து எரிக்கபட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -