உத்தேச தேர்தல் சீர்திருத்த முறைமைக்கான வாதப்பிரதிவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில் 20 வது திருத்தம் நிறைவேற்றப்படாமல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
சு.க மட்டுமே 20 வது திருத்தமும் அதனோடு இணைந்த தேர்தலும் இம்முறை நடத்தப்பட வேண்டுமென அதீத முனைப்புடன் கருத்துக்களை முன்வைக்கிறது.
ஏனைய கட்சிகள் 20 வது திருத்தத்தை வலியுறுத்தினாலும் இம்முறை நடைபெறவுள்ள தேர்தல் வழமையான முறையில் நடைபெறுவதையே விரும்புவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இது இவ்வாறிருக்க சிறுபான்மை கட்சிகளுக்கும்,சிறு கட்சிகளுக்கும் சேதம் இல்லாத வகையில் சில திருத்தங்களை அக்கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்தும் உள்ளனர்.
சிலவேளைகளில் எதிர்வரும் தேர்தல் தொகுதிவாரியாக நடைபெறுமிடத்து சிறுபான்மைக் கட்சிகளும்,சிறுகட்சிகளும் எவ்வாறு முகம் கொடுத்து அதில் வெற்றியடையும் என்பது கேள்விக்குறியே.
குறிப்பாக முஸ்லிம கட்சிகள். அத்துடன் த.தே.கூ தொகுதிவாரி தேர்தல் முறையை மிகவும் சாணக்கியமாக அனுகி அதில் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை. ஆனால் உள்ளூர் விற்பன்னர்களின் மிகமோசமான அரசியல் சாணக்கியம் காரணமாக முஸ்லிம் கட்சிகள் வீழ்ச்சிப் பாதையை நோக்கலாம்.ஏனெனில், இந்நல்லாட்சியிலும் முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் வழங்கும் தவறான தகவல்கள்,தவறான வழிகாட்டல்கள் காரணமாக சில முஸ்லிம் பிரதேசங்கள் இன்னும் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையிலும்,புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் உள்ளது.
இதன் காரணமாக சில பிரதேச மக்கள் முஸ்லிம் கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.இந்த அதிருப்தி நிலையானது தொகுதிவாரிமுறை தேர்தலில் பிரதிபலிப்பை உண்டுபண்ணுமிடத்து முஸ்லிம் கட்சிகளின் நிலை கேள்விக்குறியே..
சில வேளைகளில் இவ் அதிருப்தி நிலையினை தற்போது மீண்டும் வேகமாக எழுச்சி கண்டுவரும் ஐ.தே.க மிகவும் சாணக்கியமாகவும் பயன்படுத்தலாம்.ஏனெனில் சிறுபான்மை கட்சிகளின் தோற்றம் மறைமுகமாக இனவாதத்தினை கொண்டே கட்டியெழுப்பப்பட்டது.
முஸ்லிம் கட்சிகளின் தோற்றத்திற்கு முன்னர் அதிகளவான முஸ்லிம் மக்கள் ஐ.தே.க இனையே ஆதரித்தனர்.முஸ்லிம் கட்சிகளின் தோற்றத்திற்கு பின்னரும் சில பகுதிகளில் மக்கள் இன்னும் ஐ.தே.க இனையே ஆதரிக்கின்றனர்.
எனவே,ஒப்பீட்டளவில் தற்போதைய சூழ்நிலையில் நல்லாட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் ஐ.தே.க பின்னால் மீண்டும் முஸ்லிம் மக்கள் அணிதிரண்டாலும் ஐயமில்லை.
ஏனெனில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் கட்சிகளினால் தேர்தல் காலங்களில் உரிமை,அபிவிருத்தி என்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் சில வழுக்கள் உண்டாகலாம்.ஏனெனில் ஐ.தே.க பாரபட்சம் பாராது ஒப்பீட்டளவில் நாம் எதிர்பார்க்கும் உரிமை,அபிவிருத்தியினை வழங்கும்.
எனவே,முஸ்லிம் தலைமைகள் உள்ளூர் விற்பன்னர்களின் பொட்டலங்களையும்,சுயநலன்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாணக்கியமாக, தூய்மையான முறையில் மக்களை அணுகவேண்டும்...
M.A.Jeswath,
Faculty of Animal Science,
Uva Wellassa University.
