இலங்கை கிரிகெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர குமார் சங்கக்கார எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அநுராபுரம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக சமூக இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் சங்கக்கார இதற்கு முன்னர் பல முறை அரசியலுக்கு வரப்போவதில்லை என வெளியாகிய செய்தியை போலியாக்குவதற்கும் சிலர் முற்படுவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான தகவல்கள் வெளியாகினாலும் குமார சங்கக்காரவுக்கு அரசியலுக்கு வருவதற்கு எண்ணம் இல்லை என மிகவும் தம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
