சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் அனுசரணையில் உலர் உணவு வழங்கி வைப்பு



எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்-

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை பெறுவது மற்றும் உட்கட்டுமானம் தொடர்பாக தங்களது பங்களிப்பை வழங்குவதற்காக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, வைத்தியர் என்.ஆரீப் அவர்களது தலைமையில் இயங்கி வரும் சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் அனுசரணையில், ஹிதாயா பவுண்டேசனின் சக்காத் திட்டத்தின் ஊடாக உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 2015-06-21 ல் சாய்ந்தமருது மல்ஹாருஸ் சம்ஸ் மகாவித்தியாலயதிதில் இடம்பெற்றது.

வைத்தியர் என்.ஆரீப் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் ஆலோசகர் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வின் இணைப்பாளரான பொறியலாளர் கமால் நிஷாத் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் றமீஸ் அபூபக்கர் உள்ளிட்ட நலன்புரி மன்றத்தின் உறுப்பினர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

சுமார் 200 பயனாளிகளுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -