சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் பிளையிங் ஹோர்ஸ் லீஸ் மர்ஹும் எம்.ஐ.எம்.பௌஸி ஞாபகார்த்த கிறிக்கட் சுற்றுப்போட்டி சாய்ந்தமருது பௌஸி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
கல்முனை டொப் குயீன் அனுசரணையில் இடம்பெறும் இச்சுற்றுப் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வில் சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக்கழகம் சாய்ந்தமருது பௌஸி விளையாட்டுக்கழகத்திற்கு எதிராக 50 மேலதிக ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
சாய்ந்தமருது , கல்முனை , நிந்தவூர் , சம்மாந்துறை , நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 16 விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொள்ளும் இச்சுற்றுப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் டஸ்கஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து லெஜென்ஸ் விளையாட்டுக்கழகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதியது.
இதில் இறுதிப்போட்டிக்கு லெஜென்ஸ் விளையாட்டுக்கழகம் தெரிவாகியுள்ளது. அதுபோல் 2வது அரையிறுதிப்போட்டியில் மென்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து றியல் இம்றான் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.
இச் சுற்றுப்போட்டியின் 2வது அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப்போட்டி என்பன எதிர்வரும் 05.06.2015. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. கழகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெறவுள்ள இப்போட்டிக்கு பிரதம அதிதியாக சிரேஷ்ட சட்டத்தரணி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கலந்து சிறப்பிக்க உள்ளதாக கழகத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ். முஹம்மது கான் தெரிவித்தார்.