பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
113 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று (04) இரவு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளனர்.
சபாநாயகரின் அனுமதி கிடைத்ததும் அதனை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளதாக பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

