முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என்று பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
தாம் ஊழல்களி;ல் ஈடுபடவில்லை என்று கூறும் மஹிந்த ராஜபக்ச, முன்வந்து தமது வங்கிக் கணக்குகளையும் சொத்துக்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் சொத்துக்களை பகிரங்கப்படுத்தியவுடன் பொதுமக்கள் அவருக்காக வழங்கும் தீர்ப்பை காணமுடியும் என்று பெரேரா தெரிவித்துள்ளார்.
விஹாரைகளுக்கு சென்று மஹிந்த ராஜபக்ச, அரசியல் நடத்துகிறார். இந்தநிலையில் மதத்தலங்களை தமது அரசியலுக்கு பயன்படுத்தவேண்டாம் என்று தாம் அவரிடம் கேட்டுக்கொள்வதாக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
sa
