(சுவிஸ்) ஜேர்மன் மொழி தெரியாதவர்களுக்கு அரசு அதிரடி அறிவிப்பு

சுவிஸில் மழலையர் பள்ளிகளில் உள்ள சுவிஸ் ஜேர்மன் (Swiss German) மொழி தெரியாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியாது என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுவிஸின் ஆர்கவ் (Aargau) மண்டலத்திற்கு உட்பட்ட மழலையர் பள்ளிகளில் வரும் காலத்தில் இருந்து சுவிஸ் ஜேர்மன் மொழியில் மட்டுமே பாடம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

எனவே சுவிஸை சேர்ந்த மழலையர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த மழலையர் பள்ளி ஆசிரியர்களில், சுவிஸ் ஜேர்மன் மொழி தெரியாதவர்கள் பணியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்மையில் ஆர்கவ் மண்டல மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், சுமார் 55.21 சதவிகிதத்தினர் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு சுவிஸில் பேசப்படும் , சுவிஸ் ஜேர்மன் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இவ்வாறு சுவிஸ் ஜேர்மன் மொழி தெரியாத மழலையர் பள்ளி ஆசிரியர்களின் பணியை எதிர்வரும் 2018-2019 கல்வி ஆண்டில் பறிக்க உள்ளதாகவும், இதற்கான கல்வி சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக ஆர்கவ் மண்டல அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய கல்வி துறை அதிகாரியான Victor Brun, இந்த இடைப்பட்ட காலத்தில் சுவிஸ் ஜேர்மன் மொழி தெரியாத ஆசிரியர்கள், அம்மொழியை கற்று தேர்ந்தால் அவர்களின் பணி பறிக்கப்படும் அவசியம் ஏற்படாது என்றார்.

தற்போது, ஆர்கவ் மண்டலத்திற்கு உட்பட்ட மழலையர் பள்ளிகளில் வெளிநாடுகளை சேர்ந்த 59 மழலையர் பள்ளி ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

இவர்களில் 36 ஆசிரியர்கள் ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -