இலங்கையின் சிரேஸ்ட அறிவிப்பாளர் கலைநிலா உவைஸ் சரீபின் 35வருட கலையுலக வாழ்க்கையை நினைவு கூறுமுகமாக கலை நிலா காலை மாமன்றம் வழங்கிய தென்னிந்திய இஸ்லாமியப் பாடகர் தெனிந்திய தொலைக்காட்சிப் புகழ், கலைமாமணி, இன்னிசை முரசு, இறையன்பன் குத்தூஸ் இந்திய இசைக் குழுவுடன் கலந்து கொண்டு இசை முரசு நாகூர் ஹனிபாவின் எதிரொலியாக அவர் தனது வாழ்நாற்களில் பாடிய முக்கியமான இஸ்லாமிய பாடல்களை 07.06.2015 மாலை மருதானை டவர் மண்டம் அதிரும் வகையிலே பாடியமையானது மீண்டும் நாகூர் ஹனிபாவின் பாடல்களை அவருடைய குரலுடன் கேட்ட உணர்ச்சியினை பெற்றதாக வருகை தந்திருந்தோர் பேசிக்கொண்டதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியின் தலைமையில் இடம்பெற்ற இவ்விசை நிகழ்ச்சியினை சிரேஸ்ட அறிவிப்பாளர் கலை நிலா உவைஸ் சரீப் தொகுத்து வழங்கியதில் பிரதம அதீதியாக அழைக்கப்பட்டிருந்த கலாச்சார அமைச்சர் நந்தமிதிர எக்கநாயக்கவுக்கு பதிலாக அவருடைய செயலாளர் கலந்து சிறப்பித்ததோடு அமைச்சர். ஏ.எச்.எம்.பெளசி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், மனோ கனேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிஹ், கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பெரோசா முசம்மில், புரவலர் ஹாசிம் உமர் ஆகியோருடன் இன்னும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், கலை இலக்கியவாதிகள், சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர்கள், வர்த்தகர்கள், நாகூர் ஹனீபாவின் பிரியர்கள் என ஏராளமானோர் மண்டபத்துக்கு வருகை தந்திருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.








