கபூரி அரபுக் கல்லூரி இவ்வளவு பெருந்தொகையான அறுவடைகளைச் செய்து பெரு விருட்சமாக வளர்ந்துள்ளனதென அறியும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இன்று எங்களுக்கிடையே புதிய நட்பும் புதிய உறவும் மலர்ந்துள்ளது. கபூரிய்யா அபிவிருத்தி நிதியமும், பழைய மாணவர்களும் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து நெருங்கிய தொடர்பாடலுடன் செயற்படுவதற்கான ஒரு களம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த நாட்டில் எமது தலைமுறையினரின் சேவை கட்டாயம் தேவையானதாகும். நானும் உங்களுடன் கைகோர்த்து செயற்படவுள்ளேன் என்று மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியின் இஸ்தாபகக் குடுத்பதைச் சார்ந்த பிரநிதிநி நவாஸ் கபூர் தெரிவித்தார்.
மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்று கூடலும்; மர்ஹும் என். டி. எச். அப்துல் கபூர் அவர்ளது குடும்பதினர் நவாஸ் கபூர் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் 06-06-2015 கபூர் மண்டபத்தில் மஹரகம கபூரிய்யா அரபிக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.மஃரூப் (கபூரி எம்.ஏ) தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மர்ஹும் அப்துல் கபூர் குடும்பதைச் சேர்ந்த நவாஸ் கபூர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
விசேட உரையாற்றிய சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிதியும் தற்போதைய இந்தக் கல்லூரியின் பழைய மாணவத் தலைவருமான ஜே. எம்.. இம்ரான் இங்கு உரை நிகழ்த்துகையில்
கபூரிய்யா என்ற சொல் இலங்ககையிலுள்ள அனைத்தை முஸ்லிம்களுடைய உள்ளத்தையும் கவர்ந்த பெயர் தான் அல் கபூரிய்யா அரபுக் கல்லூரி. இந்தக் கல்லூரி கபூர் ஹாஜியாரினால் உருவாக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டது.
அவரது சொந்த செலவில் எந்தவிதமான குறைபாடுகளுமின்றி 1979 ஆம் ஆண்டு வரை கபூர் ஹாஜியார் கண்காணிப்பின் கீழ் மிகச் சிறப்பாக இயங்கி வந்தது. 1979 ஆம் ஆண்டு இந்த நிலத்தைப் பார்த்த அந்நிய சமூகத்திற்கு ஒரு பொறாமையுணர்வு ஏற்படுகிறது.
அதிகளவில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் பெரிளவிலான இடப் பரப்பை இவர்கள் மூடி மறைத்து வைத்துக் கொண்டிக்கிறார்களே என்ற பொறாமை ஏற்படுகிறது. இந்த நிலம் அபகரிக்கப்பட வேண்டும். இது பெரும்பான்மையின மக்களுக்காகப் பயன்பெற வேண்டும் என முயற்சி செய்கின்றார்கள்.
இந்த நிலம் தொடர்பான பிரச்சினைகள் பாராளுமன்றம் வரை சென்று பல அமைச்சர்கள் ஊடாக ஜனாதிபதி வரை சென்று தீர்வுகள் காணப்பட்டன எனவே இந்த கபூரிய்யாவைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமது அனைவருக்கும் இருக்கிறது. கடந்த காலங்களில் இந்தக் கல்லூயில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களாக இருக்கலாம். நலன் விரும்பிகளாக இருக்கலாம். வெளியேறிய புதியவாகளாக இருக்கலாம் யாராக இருந்தாலும் இந்தக் கல்லூரியைப் பாதுகாப்பதற்கு அரும் முயற்சிகள் மேற் கொண்ட இருக்கின்றார்கள். இதற்கான வரலாறுகள் உள்ளன
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
நவாஸ் கபூர் ஹாஜியாரின் தலைமையில் அதிபர் அஷ்ஷெயக் முபாறக் அவர்கள் சேசவையாற்றுகின்ற காலப்பகுதி மிகச் சிறப்பாக இயங்கி வந்தது . இடையில் சில மனக் சகப்பின் காரணமாக கபூர் ஹாஜியாரின் குடும்பத்தவர் இம்மத்ரஷாவை விட்டு சற்று தூரம் சென்று விட்டார்கள்.
ஆனாலும் கபூர் ஹாஜியாரின் குடும்பத்தினருக்கு அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் நன்றியுடையவராகவே இருந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு எந்தவிதமான துன்பங்களையோ விபரிதங்களையோ நாங்கள் ஏற்படுத்த மாட்டோம் என்று இன்று வரை உறுதியுடன் இருக்கின்றோம்.
இந்த கபூரிய்யாவுடைய இடம் அந்நியவர்களுடைய பார்வை தென்பட்ட போது அந்தக் காலத்தில் இருந்த எமது அதிபர்களான முபாரக் , ரூஹுல் ஹக் , செய்யத் அஹமட் ஆகியவர்கள் இந்த நிலத்தைப் பாதுகாப்பதற்காக பெரும் முயற்சிகள் செய்தார்கள். இதன் போது நிலத்தைச் சுற்றி சுவர் கட்டப்பட வேண்டும் என்ற முயற்சிகள் இவர்களால் முன்னெடுக்கப்ட்டன.
இந்த நாட்டில் இருக்கின்ற முக்கியமான உலமாக்களான அஷ்ஷெயக் முபாரக் மதனி அவர்களும் பறகஹதெனியாவிலுள்ள அஷ்ஷெ;ய்க் அபூபக்கர் சித்தீக் மதனி அவர்களும் சவுதி அரேபியாவிலுள்ள கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் மின்பாஷ் அவர்களுடைய மாணவர்கள்.
அந்தவகையில் அஷ்ஷெய்க் முபாரக் அவர்களுக்கு நற்சான்றிதழ் கிடைக்கப் பெற்றது அவர் வெளிநாடுகளான சவூதி அரேபிய்யா, குவைட் , துருக்கி நாடுகளுக்கு செல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதன் வாயிலாக அவர்கள் வெளிநாடுகள் சென்று கிடைக்கப் பெற்ற நிதியூடாக இந்த மதில் சுவரைக் கட்டுவதற்கு வழி திறக்கப்படுகிறது.
இந்த இடம் பெரிளவிலான வர்த்தக மையத்தைக் கொண்ட இடமாக விளங்குகின்றது ஆனாலும் கல்லூரி வருமானத்திற்கான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. அப்போழுது கபூர் ஹாஜியாரின் குடும்பத்தினர் எங்களை விட்டுத் தூரமாகி விட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கல்லூரியை முன்னெடுத்துச் செல்வது சம்மந்தமாக கருத்து வேறுபாடுகள் எழுந்தன அப்போழுது காலம் சென்ற ஜஷீல் ஹாஜியார் நவாஸ் கபூர் ஹாஜியாரிடம் சென்று இந்தக் கல்லூரியை நடத்துவதற்கு அனுமதி தாருங்கள் என எழுத்து மூலம் கடிதத்தைப் பெற்று இந்த மத்ரஷா இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
வெளிநாட்டிலுள்ள ஒரு தனவந்தரின ஊடாக இந்த மத்ரஸா பெருளாதார நெருக்கடியிலிருந்தும் பாதுகாக்கப்பட்டதுடன் புனர் நிணர்மானம் செய்யப்பட்டு இன்று வரை 85 வது வயதை எட்டிப்பிடிக்குமளவு ஓங்கி வளர்ந்துள்ளது. இந்தப் பகுதியில் தலைசிறந்த வர்த்தக வலய மைய மொன்றை அமைத்து இந்தக் கல்லூரி நிகரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மர்ஹும் அப்துல் கபூர் பற்றிய உரையை முகாமைத்துவ சபைத் தவவைர் அஷ்ஷெய்க் எம். எச். எம். லாபிர் மிகவும் சிறப்பான உரையை நிகழ்த்தினார். இதில் சுபைர் கபூர், அஸ்மத் கபூர் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர் நாட்டில் பல பாகங்களிலிருந்து கபூர்pய்யாவில் கல்வி கற்ற மூத்த நடுத்தர. இளம் பராய பெரு எண்ணிக்கையிலான உலமாக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் இரண்வடாவது அமர்வாக புழைய மாணவர்கள் ஒன்று கூடல் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரானும் செயலாளராக அஷ்ஷெய்க் தில்ஷானும் தெரிவு செய்யப்பட்டனர்.
இக்பால் அலியார்
(குருநாகல் பிரதான நிருபர்)







