வில்பத்து பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம் குடியமர்தப்படுவதாக அமைச்சர் ரிசாட் பதுர்டீன் மீது சுதப்படும் குற்றச்சாட்டாது உண்மைக்கு புறம்பான விடயம் என மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்புக்கான பிரதான அமைப்பாளருமான பைரூஸ் ஹஜி தெரிவித்துள்ளார்.
மேலும் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பைரூஸ் ஹஜி;
வடமாகாணம், மன்னாரில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு இன்று 30 வருடங்களாகின்ற நிலையில் வில்பத்து பிரதேசத்தை அண்டிய அவர்களுடைய நிலப்பரப்பானது மரங்கள் கேட்பார் பார்ப்பாரற்று வளர்ந்து காணப்படுகின்றமையினால் காடுகளாக மாறியுள்ளமையானது இயற்கையான விடயமகும்.
வடமாகாணம், மன்னாரில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு இன்று 30 வருடங்களாகின்ற நிலையில் வில்பத்து பிரதேசத்தை அண்டிய அவர்களுடைய நிலப்பரப்பானது மரங்கள் கேட்பார் பார்ப்பாரற்று வளர்ந்து காணப்படுகின்றமையினால் காடுகளாக மாறியுள்ளமையானது இயற்கையான விடயமகும்.
சொந்த இடங்களில் 30வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு வசித்த மக்கள் குடியமர்த்தப்படும் பொழுது அவர்களுடைய இடத்தில் காடுகளாக வளர்ந்துள்ள மரங்களை வெட்டியே ஆகவேண்டும். அதற்காக ரிசாட் பதுர்டீனின் தலைமையில் வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்படுகின்றார்கள் என பேரின வாதிகளும், அரசியல் காள்புணர்ச்சியுள்ளவர்களும் கூறுவததானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும் ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலுமாகும். இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
‘
இவ்விடயம் சம்பந்தமாக அன்மையில் அமைச்சர் ரிசாட் பதுர்டீன் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள் அடங்களாக பலரை குறித்த வில்பது பிரதேசத்துக்கு அழைத்துச் சென்ற வேலையில் எமது சமூகத்துக்காகவும் உண்மைக்கு புறம்பான முறையில் குற்றம் சுமர்த்தப்படும் ரிசாட்பதுர் டீனுக்கு ஆதரவாக தானும் அப்பிரதேசத்துக்கு சென்று அவருக்கும் மன்னார் மாவட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக குறைந்தது ஒர் அறிக்கையேனும் வழங்கவில்லை என்பதனை நினைக்கும் பொழுது பெரும் கவலை அளிக்கின்றது எனக் கூறியதுடன், சில ஊடகங்கள் இந்த வில்பத்து விடயத்திலும், 1990ம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அபிரதேசத்துக்கு குடியமர்தப்படும் விடயத்தில் பக்கசார்பான செய்திகளையும், உண்மைக்கு புறம்பான விடயங்களையும் அடிபடையாக வைத்து அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான கருத்துக்களை திரிவுபடுத்தி தெரிவித்து வருக்கின்றமையானது என்னை பொறுத்தவரையில் ஊடக தர்மமாக பார்க்க முடியாதுள்ளது என ஆணித்தரமாக கூறினார்.
பைரூஸ் ஹாஜி ரிசாட்பதுர்டீனுக்காகவும் , மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற மக்களுக்காகவும் தெரிவித்த கருத்துக்களி காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அஹமட் இர்ஷாட்
(ஓட்டமாவடி பிராந்திய நிரூபர் )
