SLBC முஸ்லிம் நிகழ்ச்சி தொடர்பாக சமய விவகார மற்றும் அஞ்சல் அமைச்சருக்கு கடிதம்!

பழுலுல்லாஹ் பர்ஹான் , ஜுனைட்.எம்.பஹ்த்-
லங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ஒலிபரப்பப்படும் முஸ்லிம் நிகழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் தெளிவற்ற நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலிலும் இருந்து ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகளையும், மார்;க்க விடயங்களையும் கேட்க முடியாத ஓர் அசௌகரிய நிலையினை கிழக்கு மாகாண மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

இதனை கருத்திற் கொண்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சியினை சீர் செய்து தருமாறு கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; பொறியியலாளர் ஷிப்லி பாறூக் முஸ்லிம் சமய விவகார மற்றும் அஞ்சல் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கும் மற்றும் மக்கள் தொடர்;பாடல், தகவல் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கும் கடந்த 27.04.2015 அன்று ஓர் கடிதத்தினை அனுப்பியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதிலலித்த முஸ்லிம் சமய விவகார மற்றும் அஞ்சல் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் 29.04.2015 ம் திகதி கடிதம் மூலம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு உடனடியாக கிழக்கு மாகாணத்தில் தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சியினை தெளிவாக கேட்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளர் (தொழிநுட்ப உத்தியோகஸ்தருடன் தொலைபேசியினூடாக 06.05.2015 அதாவது புதன்கிழமையன்று தொடர்புகொண்டு கேட்ட போது தொழிநுட்பக் கோளாறு காரணமாக ஒலிபரப்பில் சில தடங்கல்கள் இருப்பதனால் ஒலிபரப்பு தெளிவற்றதாக காணப்படுகிறது. 

இதனை நாங்கள் தற்போது சீர் செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் இதனை வெகுவிரைவாக சீர்; செய்து இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக கேட்கலாம்; எனவும் உறுதியளித்தார் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -