அக்.அல்முனீறா பெண்கள் உயர்தரப்பாடசாலையில் அம்பாறை மாவட்ட மட்ட தமிழ்தினப் போட்டியின் ஓர் அங்கமாக எழுத்தாக்க நிகழ்ச்சிகளான, கவிதை. கட்டுரை. சிறுகதை. குறுநாடகம். திறனாய்வு போன்றன நடைபெற்றன.
இந்நிகழ்வுகள் கிழக்குமாகாண தமிழ் மொழிப்பிரிவு இணைப்பாளர் கெ.விக்னராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் அக்கரைப்பற்று வலயப்பிரதித் தமிழ் கல்விப்பணிப்பாளர் ஹனிபா இஸ்மாயில், சம்மாந்துறை வலய பிரதித் தமிழ் கல்விப்பணிப்பாளர் இசட்.எம்.மன்சூர் திருக்கோயில் பிரதித்தமிழ் கல்விப்பணிப்பாளர் எஸ்.வினாயகமூர்த்தி , தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர்கள் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
