ஞாயிறன்று ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட மாநாடு!

மனோ தலைமையில் அதிதிகளாக ரணில், திகா, ராதா, கிரியெல்ல கலந்து கொள்வர் 

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பேராளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை 31ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பித்து, கண்டி, டி.எஸ். சேனாநாயக்க வீதி, ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நடைபெறும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசனின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சிறப்பு அதிதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும்,ஐதேக கண்டி மாவட்ட தலைவரும், பெருந்தோட்ட துறை அமைச்சருமான லக்ஷமன் கிரியல்ல,தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி ராஜாங்க அமைச்சருமான வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

முன்னணியின் அரசியல்குழு உறுப்பினர்கள் மற்றும் கண்டி மாவட்ட வட்டார செயலாளர்கள்,அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இம்மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், முன்னணியின் உப தலைவரும், கண்டி மாவட்ட செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான வேலு குமார் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்குழு முன்னெடுத்து வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -