முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு!

த்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் நாளை இடம்பெறவுள்ளது.

நாளை பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரவி கருணாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார். விஷேட அதிதிகளாக கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் கொள்கை திட்டமிடல், நிதி திட்டமிடல், சிறுவர், இளைஞர் மற்றும் கலாச்சார விவகார பிரதியமைச்சர் ஹர்ச டி. சில்வாவும் நிகழ்வில் பங்குகொள்ளவுள்ளனர். 

அத்துடன் கொழும்பு மாநகர சபை உறுப்பனர்களான எம்.எச்.எம்.நௌபர், எம்.ஏ.ஸராப்தீன், அப்துல் பாஸிக், ஏ.சிம்.எம்.பதுருதீன், ஆரியரத்தின சந்தியாகோ, கித்சிறி ராஜபக்ஷ, எம்.எஸ்.எம்.பாஹிம், எம்.ரி.இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். 

மத்திய கொழும்பிலுள்ள 1500 வரிய மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை, அப்பியாசக் கொப்பிகள் மற்றும் குடிநீர் போத்தல் உள்ளிட்ட பொதிகள் அடங்கிய பொதி வழங்கப்படவுள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் செயலாளர் அலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -