புல்மோட்டை மற்றும் பதவி ஸ்ரீபுர கிராமங்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய நீர் வழங்கல் அமைச்சினால் ஜெய்கா திட்டத்தினால் 120 மில்லியன் ரூபா வீதம் குறித்த பகுதிக்கு ஒதுக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்ட நீர் விநியோக திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபைக்கு கையளிக்கப்பட்டு கௌரவ அமைச்சர ரவூப் ஹக்கீமினால் திட்டம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கபட்டது.
பின்னர் 08.05.2015 ஆம் திகதி மக்கள் பாவனைக்கான புதிய இணைப்புகள் அரபாத் நகரில் இருந்து புல்மோட்டை அலுவலகத்தின் பொறுப்பதிகாரி மவ்ஜுததின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினரும் நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் இணைப்பாளருமான சல்மான் பாரிஸ் உட்பட பிரதேச வாசிகளும் கலந்து கொண்டு இணைப்பை வழங்கி வைத்தனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)