கல்விமான் ஜெமீலின் நினைவுப் பேருரைகளும் துஆப் பிராத்தனையும்!

அஸ்ரப் ஏ சமத்-
ல்விமான் எஸ்.எச்.எம் ஜெமீலின் நினைவுப் பேருரைகளும் துஆப் பிராத்தனையும் நேற்று இரவு கொழும்பிலுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்சலமில் துஆப் பிராத்தனையுடன் மண்டபம் நிறைந்த வருகையாளர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இங்கு வரவேற்புரையை மணிப்புலவர் மருதூர் ஏ மஜித் நிகழ்த்தினார். 

ஏ.ஆர்.எம் ஜிப்ரி அவரது நினைவுகளையும் அவர் காட்டிய முன்மாதிரிகளையும் இடை இடையே அறிவுப்புச் செய்தார். 

ஜெமீலின் குடும்ப உறவினர்கள் மற்றும் அவர் கல்முனை சாஹிராக் கல்லூரியில் அதிபராக இருந்தபோது அவர் வழிகாட்டி தற்பொழுது தலைநகரில் புத்திஜீவிகளாக திகழும் டொக்டர்கள் இன்ஜினியர்கள் சட்டத்தரணிகள் என பல்வேறுபட்ட கல்முனை சாஹிரா பழைய மாணவர்கள் அங்கு காணப்பட்டார்கள். அத்துடன் முஸ்லீம் காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளும் அங்கு சமுகம் தந்திருந்தனர்.

அமைச்சர் ரவுப் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில்;

காலம் சென்ற ஜெமீல் ஒருபோதும் பதவிகளை கேட்டு வாங்குவதில்லை அவர் மரணிக்க முன்பு தென்கிழக்கு பல்கலைக்கழக கவுண்சில் உறுப்பினர் பதவியை மீண்டும் இருக்க விரும்புவதாக தண்னிடம் தெரிவித்தார். அந்தப் பதவி அவருக்கு எமது சிபார்சு முலம் வழங்கப்பட்டது. ஆனால் அப் பதவி வகிக்க முடியாமல் அவர் எம்மை விட்டுப் பிரிந்தார்.

மதவிவகார அமைச்சில் ஜெமீல் பதவி வகிக்கும்போது அம்பாறை மாவட்ட மீலாதுன் விழா அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. அதற்காக வெளியிட்ட நூலில் அவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்றஃப் அவர்கள் அம்பாறை மாவட்ட அரசியல் பற்றி ஒரு பந்தியை எழுதும்போது 10 முறைக்கு மேலாக ஜெமீலை அழைத்து அதனை சரிபார்த்து கேட்டு தலைவர் அஸ்ரப் அக் குறிப்பை எழுதினார். 

அவர் கடைசியாக இந்த நாட்டு முஸ்லிம்களது நூல்கள் 2650 கொண்ட சுவடியாற்றுப்படை வெளியிட்டு இருந்திருந்தார். அடுத்த வெளியீடாக 3650 நூல்கள் கொண்ட ஒரு நூலையும் வெளியிட என்னிடம் இவ்விடயம் பற்றி உரையாடினார். அதனை அவர்களது குடும்பத்தினர் அத் தொகுதியை தொடர்ந்தும் வெளியிட முன்வருதல் வேண்டும். அதற்கான உதவியை நான் செய்யத் தயாராக உள்ளதாக அமைச்சர் ஹக்கீம் அங்கு தெரிவித்தார். 

தென்கிழக்கு பல்கழைக்கழகத்தில் நூலகத்தில் ஜெமீலின் நூல்கள், பேராசிரியர் அ.மு.உவைஸ் நூல்கள் மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்றப் நூல்கள், எஸ.கமாலுத்தீன் நூல்கள் என பல பிரிவுகள் உள்ளன. அங்கு இவர்களும் தமது நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். அதனை அங்கு சென்றபோது நான் அரை மணித்தியாலயம் தங்கி அதனை பார்க்க முடிந்தாகவும் அமைச்சர் ரவூப் தெரிவித்தார்.

மலேசியா நாட்டின் இஸ்லாமிய ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்திய கலாநிதி தத்தோ இக்பாலும் இங்கு ஜெமீல் பற்றி உரையாற்றினார். அந்த மாநட்டின் பங்குகொள்ள வந்த இலங்கையர்களை முறையாக வழிநடாத்தி சரிபட நடாத்தியவர் ஜெமீல் எனத் தெரிவித்தார்.

பேராசிரியர் தில்லைநாதன்- அறிஞர் அசீசின் மாணவனாக ஜெமீல் விளங்கினார். 

அவரின் மாணவர்களாக நானும், பேராசிரியர் அமீர் அலியும்  இருந்தோம். அவர் ஒவ்வொரு வருடமும் அறிஞர் அசீஸ் பற்றிய நிகழ்வுகளை தொடர்ந்து வெளியிட்டார். அறிஞர் அசீஸ், அறிஞர் சித்திலெப்பை, ஜயா போன்ற பெரியார்கள் பற்றி கட்டுரைகள் நூல்கள் எழுதியுள்ளார். சகல விடயங்களையும் நேர்த்தியாக செய்வார். 

காலம் சென்ற கைலசாபதி நிகழ்வொன்றை கல்முனையில் மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தியிருந்தார். அவர் கல்வித்துறையில் முஸ்லீம்களுக்கு பாரிய சேவையை செய்த ஒருவர் என பேராசிரியர் தில்லை நாதன் உரையாற்றினார்.

டாக்டர் தாசீம் அகமத் இவ் நிகழ்வை குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்வதற்கு கவிஞர் ஹசீர், இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, மருதூர். ஏ மஜீத் ஆகியோர் சேர்ந்து எடுத்தோம். . இது நிச்சயம் ஜெமீல் பௌண்டேசன் ஒன்றை அவர் தெஹிவளையில் நடைபெற்ற அவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் ஏற்கனவே ஆரம்பித்திருந்தார். அது தொடர வேண்டும். அவரது சகல அறிவு சார்ந்த நூல்கள், தகவல் பெட்டகம் மற்றும் சுவடியாற்றுப்படுக்கை என்பன மீள தொடரும் என ஏற்பாட்டாளர் டாக்டர் தாசீம் அகமத் தெரிவித்தார்.

குடும்பத்தின் சார்பில் ஜெமீலின் மருமகள் சட்டத்தரணி சபான ஜூனைதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.(ந)












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -