யாழ்ப்பாணம் கொத்தத்துறையில் கழுத்து வெட்டி இளம் பெண் படுகொலை!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் மூளாய் கொத்தத்துறைப் பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மாட்டு வண்டிச் சவாரித் திடலைக் கடந்து கொத்தத்துறை இந்து மயாணத்திற்குச் செல்லும் வழியில் மயாணத்திலிருந்து சுமார் 200m தூரத்திலேயே மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலையுண்ட இளம் பெண் வட்டுக்கோட்டை தெற்கு இன்பச்சோலையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வசந்தி) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இவரின் கணவர் பாலசுப்பிரமணியம் வீதிவிபத்தில் இறந்ததைத் தொடர்ந்து தன்னைவிட பத்து வயதுக்கும் குறைந்த அதே இடத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். சில நாட்களின்முன் இருவரும் காணாமற்போயிருந்த நிலையில் உறவினர்களால் நேற்றையதினம் தேடிப்பிடிக்கப்பட்டு இருவரையும் பிரித்து எச்சரிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இக் கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலை நடந்த இடம் மேற்படி பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைந்த காட்டுப் பிரதேசமாகும்.

மேலும் அவரது நீண்ட தூரப் பயணத்திற்கான உடைகள், மணிக்கூடு, அழகுசாதனப் பொருட்கள், கைக்கொழுவிப்பை, கையடக்கப்பை, தேசிய அடையாள அட்டை என்பனவும் சடலத்தின் அருகில் திதறுண்டு காணப்படுகின்றன. இவற்றை வைத்துப் பார்க்கையில் இந்தப் பெண் நன்கு திட்டமிட்டே அங்கு அழைத்துவரப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸாரும் தடயவியல் பரிசோதனைகளை யாழ்ப்பாணப் பொலிஸாரும் மேற்கொள்கின்றனர்.றி


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -