பியூமி கபூர்-
அமைச்சர் ரிசாட் மீது இருக்கும் தனிப்பட்ட குரோதம் சில ஊடகங்களின் ஊடாக அப்பட்டமாக வெளிப்படுகிறது .
நாடு நிலையையும், தர்மத்தையும் பேண வேண்டிய ஊடகங்கள், வசை பாடுவது கண்கூடாக காண முடிகிறது .
வில்பத்து பிரச்சினை என்பது பேரினவாதிகளின் அப்பட்டமான சோடிக்கப்பட்ட ஒரு பொய் மூட்டை. புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகளில் ,வாழ்வாதாரத்தில் விளையாடுவதற்கு எந்த ஒரு சுயநல வாதிகளுக்கும் இடமளிக்க முடியாது.
இது அமைச்சர் ரிசாதின் பிரச்சினை அல்ல ,இது சமூகத்தின் பிரச்சினை .
ரிசாதின் மீது இருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை அவர்கள் வேறு வலையில் தீர்த்து கொல்ல்ள்ளலாம், அதை விடுத்தது முஸ்லிம்களின் உரிமையிலும், இருப்பிடத்திலும் கையடிக்க வேண்டிய அவசியம் இல்லை .
இது உடன் நிறுத்தப் பட வேண்டும், இல்லை என்றால் வீதிக்கு இறங்கி போராட வேண்டி ஏற்படும். ஊடகங்கள் தர்மத்தை எல்லாம் மறந்து ,தனிமனிதனுடைய விருப்பதிற்காக ,ஒரு சமூகத்தின் உரிமைகளை பலிக்கடா ஆக்கிக் கொண்டிருகிறது .
அமைச்சர் ரிசாதின் மீது கொண்ட தனிப்பட்ட காள்புனர்சிக்கு பலியாகி இருப்பது , வஞ்சிக்கப்பட்ட, அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு சமூகம் புலிகளால் விரட்டப்பட்டு இருப்பிடத்தையும் உரிமையையும் இழந்து அகதிகளின் உரிமையில் தான் இப்போது வில்பத்து என்ற பெயரில் ஊடகங்கள் வசை பாடுவது .
அப்பட்டமாக அமைச்சர் ரிசாதின் மீது கொண்ட குரோதத்தின் வெளிப்பாடே ஒழிய வேறில்லை நிதானமாகவும் ,நடு நிலையாகவும் இயங்க வேண்டிய ஒரு ஊடகம் ,சிறுபான்மை மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு ஊடகம் .இவ்வாறு கபட நாடகம் ஆடுவது ஏற்று கொள்ள முடியாது.
இனவாதிகளின் கபட நாடகத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் இந்த சிறுபான்மை ஊடகத்திற்கு முஸ்லிம்கள் செய்த அநீதிதான் என்ன ?
இனவாதிளுடன் இணைந்து காடழிப்பு எனும் அப்பட்டமான புளுகு மூட்டையை , முஸ்லிம்கள் மீது கொட்டி தீர்பதற்கான காரணம் தான் என்ன ?
அமைச்சர் ரிசாதின் மீது இருக்கும் தனிப்பட குரோதத்தை முடிந்தால் அவருடன் தீர்ப்பதை விட்டு விட்டு ஏன் இந்த அபாண்டம் ?
நல்லாட்சியில் கூட இவர்களால் நல்லவர்களாக மாற முடியாவிட்டால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .
அமைச்சர் ரிசாதை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு ஒரு சமூகத்தை பழி வாங்கி கொண்டிருகிறார்கள் இந்த இனவாதிகள் .
தலைவர் அஷ்ரப் இருந்த போதும் இவ்வாறுதான் இந்த இனவாதிகள் கொக்கரித்தார்கள் .வளர்ந்து வரும் ,ஆளுமை மிக்க எந்த ஒரு முஸ்லிம்களின் தலைமையையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை, அதற்கான சூட்சியின் ஒரு படி தான் இந்த வில்பதுவும் ரிசாதும் .
இதனை இவர்கள் நிறுத்த வேண்டும் ,முக மூடி ,நபர்களை வைத்து பிழைப்பு நடத்து ஊடகங்கள், இந்த அசிங்கமான அபாண்டங்களை விட்டு ,ஊடக தர்மத்தினை பாதுகாக்க முன் வர வேண்டும் என்பது எமது அமைப்பின் பணிவான வேண்டு கோள்.(ந)
