பொத்துவிலில் முஸ்லிம் மையவாடி ஊடாக விகாரைக்கு வீதி: மக்கள் எதிர்ப்பு

இர்ஸாத் ஜமால்தீன்- 

ண்மையில் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அவரவர் பிரதேசத்தில்  அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு பிரதேச சபையினால் சுமார் 200000  இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது.

அந்த வகையில் பிதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில்  அமைந்திருக்கும் முஸ்லிம் மைய வாடியினை இரண்டாக பிரிக்கும் வகையில் கறவலிடப்பட்ட  பாதை அமைத்துள்ளார். அப்பாதை பொதுப்பாதையாக குறிப்பிடப்பட்டுள்ள தோடு, பொதுமக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளது. 

இப்பாதையினை பெண்கள் உட்பட பலரும் தமது போக்குவரத்திற்கு பயண்படுத்துவதுடன்,ஆட்டோ மோட்டார் வண்டி, உட்பட பல வாகணங்களும் இப்பாதையினால் பயணிக்கின்றது.

இப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் முகுது மஹா விகாரைக்குச் செல்லும் பெளத்த மத்தினை சேர்ந்த ஆண்கள் உட்பட பெண்களும் இப்பாதை ஊடாக செல்கின்றனர்.

கடந்த வெசாக் தினங்ளில் குறித்த விகாரைக்கு அதிக எண்னிக்கையிலான பெளத்த மக்கள் இப்பாதை ஊடாக விகாரைக்கு சென்றதாகவும், மைய வாடியின் மதில் ஒரங்களில் நின்டுகொண்டு சிரு நீர் கழித்ததாகவும் கண்டவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் எதிர்காலத்தில் இப்பாதை காபட் இடப்பட்டு விகாரைக்கு செல்வதற்கு இலகு வழியாக பயண்படுத்தப்படலாம் என பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.

இப்பாதையினால் முஸ்லிம் மைய வாடி எதிர்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை கருத்தில் கொண்ட பொத்துவில் பொது மக்கள் நேற்று (08) ஜூம்மா தொழுகையின் பின்னர் மைய வாடியின் அருகாமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மைய வாடிய ஊடாக தேவையற்ற வகையில் பாதை அமைத்த பிரதேச சபை உறுப்பினரையும், அதற்கு அனுமதி வழங்கிய பிரதேச சபையினையும் கண்டித்ததுடன், பாதையினை மூடுமாறும் கோசமெலிப்பினர்.

பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு நடையாகச் சென்ற ஆர்பாட்டக்காரர்கள், இப்பாதையினை தடுத்து நிருத்துமாறு பிரதேச சபையின் செயலாளரிடம் வேண்டுகோலை முன்வைத்து மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட செயலாளர் இது தொடர்பாக உரியவர்களுக்கு தெரிவிப்பதாகவும், பாதையை மூடுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.





 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -