வடக்கு மாகாண போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கும் விசேட ஒன்றுகூடல்!

 டக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இரு தரப்பினரதும் நேர சூசிகளை 60:40 என்ற வீதாசார அடிப்படையில் புதிதாக தயாரித்து போக்குவரத்தில் ஒரு ஒழுங்குத்தன்மையை பேணும் நோக்கோடு கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதலாவது ஒன்றுகூடல் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று. 

09 பேர் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 07-05-2015 காலை யாழ்ப்பாணத்திலும், மாலை கிளிநொச்சியிலும் நடைபெற்று தனியார், இ.போ.ச, மாவட்ட செயலகம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொலிஸ் உயர் அதிகாரிகள் என அனைவரையும் உள்ளடக்கியதாக யாழ்ப்பாணத்தில் 13 பேர் கொண்ட குழுவும், கிளிநொச்சியில் 09 பேர் கொண்ட குழுவுமாக அமைக்கப்பட்டது தொடர்ந்து 08-05-2015 காலை வவுனியா மாவட்டத்திலும் மாலை முல்லைத்திவு மாவட்டத்திலும் இவ்வாறு ஒன்றுகூடல்கள் இடம்பெற்று 09 பேர் அடங்கலான நேரசூசி தயாரிக்கும் குழு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,.

இவ் விசேட ஒன்று கூடல்களின் போது அந்தந்த மாவட்ட அரச அதிபர்கள் மாறும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு சத்தியசீலன், பொலிஸ் உயர் அதிகாரிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் போன்றோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ் ஒன்ருகூடலானது மாவட்ட செயலகங்களில் இடம்பெற்றது.
sa




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -