ஐ.தே.க. மாவட்ட அமைப்பாளர் பதவி பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி!

அஸ்ரப் ஏ சமத்,சுஜப் எம் காசீம்-

.தே.க. மாவட்ட அமைப்பாளர் பதவி பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி திருமதி பெரோஸா திருமதி. பெரோஷா முஸம்மில் கொழும்பு மாவட்டத்தின் ஐக்கிய  தேசியக்கட்சி அமைப்பாளராகப் பதவி பெற்றுள்ளார். 

இவர்  கொழும்பு மாவட்ட மகளிர் மத்தியில் பிரபலம் பெற்ற  பரோபகாரப் பெண்மணி ஆவார். கொழும்பு நகரபிதா ஏ.ஜே.எம்.  முஸம்மிலின் அன்புத் துணைவியாரான இவர், இரக்க சிந்தையும் கருணை  உள்ளமும் கொண்டவர். இன, மத பேதமற்றவர். 

இவர் தலைமை தாங்கும் பெண்கள் அமைப்பான 'காந்தா சவிய' மூலம் ஏழைப்பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கு வேண்டிய புத்தகங்கள், கொப்பிகள் மற்றும் கல்வி உபகரணங்களை வருடா வருடம் வழங்கி வருகின்றார். தமது சொந்தப் பணத்தையும் ஏழைகளின் நல்வாழ்வுக்குச் செலவழித்து வருகிர். 

காந்தா சவிய மற்றும் முஸம்மி;ல் பவுண்டேஷன் அமைப்பு மூலம் பெண்களின் சுயதொழில் வாய்ப்புக்கு நிதி உதவி அளிக்கின்றார். இதனால் பல்லாயிரம் பெண்களின் நன்மதிப்புப் பெற்றுச் சமூகப் பணியில் ஈடுபடுகிறார்.

அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் ஐ.தே.கவின் நீண்டகால உறுப்பினராக, அசைக்க முடியாத ஐ.தே.க. ஆதரவாளராகவும் விளங்குகிறார். 

ஐ.தே.க., ஆட்சியில் அமராத காலகட்டங்களில் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் பலர் சந்தர்ப்பத்தை நழுவவிடாது, பதவிக்கும் அதிகாரத்துக்கும் துணைபோய் ஐ.தே.க.வை ஒதுக்கியுள்ளனர். கட்சிக்கு துரோகம் இழைத்தனர். 

ஆனால் தமது கட்சியின் எழுச்சிக்காலம், வீழ்ச்சிக்காலம் அனைத்திலும் கட்சியுடன் கட்டுப்பாடாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு உழைத்துப் பெருமை பெற்றவர் இப்பெண்மணி. கடந்த மாகாண சபைத் தேர்தலில் அரசியல் விரோதிகள் சிலரின்  சதிகளால் இவருக்கு அபேட்சகராக நிற்கும் சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை. 

எனினும் கட்சித் தலைமையிலும் கட்சியிலும் உள்ள  பெருமதிப்புக் காரணமாக பொறுமையுடன் இருந்து கட்சி நலனுக்காகப்   பாடுபட்ட பண்பாளர் இப்பெண்மணி, தனது அன்புக் கணவரும்; 

கொழும்பு மாநகர முதல்வருமான ஏ.ஜே.எம் முஸம்மில் வழி  நின்று நிதானமாக அரசியல் பணி மேற்கொண்டு வரும் திருமதி  பெரோஷா மக்கள் பணியை மகிழ்ச்சியாக மேற்கொண்டு  வருகின்றார். 

தற்போது இவருக்குக் கிடைத்திருக்கும் ஐ.தே.க. அமைப்பாளர் பதவி இவரது நேர்மையான கட்சிப் பணிக்கும் சமூகப் பணிக்கும் கிடைத்த ;சன்மானம் ஆகும்.

ஐ.தே.க.வின் மாவட்ட அமைப்பாளர் பதவியொன்று கிடைக்கப்பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணியென்ற ;வரலாற்றுப் பெருமையை; ;இவர் பெற்றுக்கொள்கின்றார்.

இவர் வழி நடத்தும் காந்தா சவிய அமைப்பு கொழும்பு மாநகரில் இவரைப் பாராட்டி நிகழ்வொன்றை நடத்தியது. அரசியல் முக்கியஸ்;தர்கள் பலர் அங்கு இவரின் பணிகளையும் பண்பையும் சிலாகித்துப் பேசினர். கட்சியினதும் மக்களினதும் நம்பிக்கைக்கு பாத்திரமான வகையில் தான் செயற்படுவேன் என திருமதி. பெரோசா அங்கு உறுதியளித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -