நாட்டில் காலாவதியான அரசாங்கமே உள்ளது - தேர்தலுக்காக ஐதேக காத்திருப்பு!

நாட்டில் தற்போது இருப்பது காலாவதியான அரசாங்கம் என்றும் எண்ணெய் மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதெனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தல் நடத்துவதை ஐக்கிய தேசியக் கட்சி பொறுமையின்றி பார்த்துக் கொண்டிருப்பதாக கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார். 

20ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றம் கலைக்கப்படும் என நம்புவதாக அவர் கூறினார். 

அடுத்த பொதுத் தேர்தலின் பின் நிரந்தர ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி ஏற்படுத்தப்படும் என்றும் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை இணைத்து ஆட்சி அமைப்பதே எதிர்பார்ப்பு என்றும் லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டார். 

இலங்கைக்கு இல்லாது போன கீர்த்தி தற்போது மீண்டும் கிடைத்துள்ளதாகவும் உலகத் தலைவர்கள் இலங்கை வர வரிசையில் நிற்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

மஹிந்த ஆட்சியில் உலகத் தலைவர்களிடம் இருந்து கிடைத்தது கடனே தவிர முதலீடு அல்ல என்றும் ஆனால் புதிய ஆட்சியில் முதலீடு வந்து சேர்வதாகவும் பிரதமர் கூறியது போன்று இளைஞர் யுவதிகளுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றும் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -