அலுவலக செய்தியாளர் (ஜ)
அம்பாறை மாவட்டத்தின் எழில் அழகில் மயங்கும் இறக்காமம் எனும் மலை,குளம்,காடு,வயல் சார்ந்த பசுமைப்பிரதேசம் அதனுடைய பூர்வீக வரலாற்றினை ஆவணமாக்கும் முயற்ச்சியில் எழுத்தாளர் லரீப் சுலைமான் எழுதிய இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல் எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் இறக்காமம் பொதுச்சந்தை கட்டிடத்தில் அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளத்தின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.கே.அப்துல் ரவூப் மௌலவி தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவர் , நகர அபிவிருத்தி, நீர் வளங்கள் வடிகால் அமைப்பு, அமைச்சர் அல்- ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
வரலாற்று நூல் ஆய்வை மிக காத்திரமான முயற்ச்சியாக வெளியிட்ட லரீப் சுலைமான் பாராட்டப்பட்டார். அதனைத்தொடர்ந்து விழாவில் வரலாற்று நூலின் முதல் பிரதியை பெறுவதன் மூலமாக ஆய்வாளரையும் தன்னை சார்ந்த சமூகத்தினையும் கௌரவப்படுத்தும் வகையில் இறக்காமம் புகழ் சட்டத்தரணி எம்.ஐ.எம்.ராஷிக் அவர்கள் பிரதம அதிதி கௌரவ அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களின் திருக்கரத்தினால் பெற்றுக்கொண்டார் .
நிகழ்வில் பல விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றியதுடன் நூற்றுக்கனக்கானோர் கலந்துகொண்டு நூலினையும் பெற்று தமது பிரதேசத்தின் சரித்திரத்தில் இடம்பிடித்துக்கொண்டனர்.