அநீதி இழைக்கப்பட்ட ஆசிரியர்கள் என்னை சந்திக்கவும் -முதலமைச்சர் நஸீர் அஹமட்

கிழக்கு மாகாணத்தில் இம்முறை பயிற்சி முடித்து வெளியான ஆசிரியர்களுக்கான நியமனம் கிழக்கு மாகாணம் தவிர வேறு மாகாணங்களில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக தன்னை சந்திக்கவும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

1850 க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் கிழக்கில் இருந்தும், கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு அனுப்பி இருக்கும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைக் கண்டித்த முதலமைச்சர் உடனடியாக குறிப்பிட்ட ஆசிரியர்களை எதிர்வரும் 12.05.2015 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண சபைக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அநீதி இழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

எனவே குறிப்பிட்ட அழைப்பை ஏற்று தங்களின் பிரச்சனைகளைக் கூறி அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -