மத்திய மாகண சபை உறுப்பினர் அசாத் சாலியின் கண்டி காரியாலயம் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அசாத் சாலியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடும் வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.
இதனையடுத்து பொலிசாரின் தலையீட்டினால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்றைய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் எனவும் ”முஸ்லிம் சிங்கள நல்லுறவை சீர் குலைக்கும் அசாத் சாலி கண்டிக்கு வேண்டாம்” என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.