பொத்துவில் அரபுக்கலூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா, வீடியோ இணைப்பு

இர்ஸாத் ஜமால்தீன்-



லங்கையில் மார்க கல்வியை மானவர்களுக்கு போதிப்பதில் பல இஸ்லாமி கற்கை நெறி கலாசாலைகள் மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றது.

அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக பொத்துவில் பிரதேசத்தில் அர்பணிப்புடன் செயற்பட்டு, பல மார்க அறிஞர்களை சமூக சேவையாலர்களாக உறுவாக்கி வரும் அரபுக் கலாசாலை ஸபீலுர்றஷாத் அரபுக்கல்லூரியாகும்.

இக்கல்லூரியில் இது வரை சுமார் 30க்கும் மேற்பட்ட உலமாக்களும்,50க்கும் மேற்பட்ட ஹாபிழ்களும் தங்களின் கற்கை நெறியை மிகச் சிறப்பாக பூர்தி செய்துள்ளனர்.

இவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (16) மாலை கல்லூரியின் திறந்த வெளி மைதானத்தில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷைஹ் அப்துல் கையூம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம அதிதிகளாக சர்வதேச இஸ்லாமியப் பேச்சாளர் அஷ்ஷைஹ் யூசுப் ஹனீபா, அஷ்ஸைஹ் அப்துல் காலிக் அவர்களும், விஷேட அதிகளாக சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷைஹ் அலியார் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

அத்துடன் விழாவை சிறப்பிக்கும் வகையில் பொத்துவில் உமாக்களும், புத்திஜீவிகளும் மற்றும் பெரும் திரலான ஊர்மக்களும் கலந்து கொண்டனர்.

பட்டம் பெற்றுச் சென்ற அர்றஷாதிகள் தங்களுக்கு கல்வியோ கற்றுத்த தந்த ஆசிரியர்களை கெளரவிக்கும் வகையில் பல பரீசில் பொருற்களையும், நினைவுச்சின்னங்களையும் தமது ஆசிரயகளுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -