அபு அலா -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் மூத்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீலிற்கான நினைவேந்தல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை (08) கொழும்பு – 02 வெக்ஷோல் லேனினுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மலேசியாவின் டத்தோசிறி முகம்மது இக்பால் நினைவுரையாற்றினார். மேலும் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீலின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)