கூட்டு ஒப்பந்த 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை 18 ஆம் திகதி!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பான 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. 

இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார். 

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய ஒப்பந்தம் தொடர்பான முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் இடம்பெற்றது. 

இதன்போது சம்பள உயர்வு குறித்து கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. 

குறித்த பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. 

தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பில் எனது தொழிற்சங்கமும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தொழிற்சங்க கூட்டு ஆணைக்குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளது. 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் வேலைக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -