நிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு எதிராக மஹிந்த மனுத்தாக்கல்!

நிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இவ்வாரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஒருவரை அகெளரவப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து நிதி மோசடி பொலிஸ் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதால் இதைத் தடுக்க இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சிரேஸ்ட அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார்.

துபாயிலுள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் இலங்கையின் பிரபல அரசியல்வாதியொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அநாமதேய முறைப்பாட்டின் படி நிதி மோசடி குறித்த பொலிஸ் பிரிவு எதுவித விசாரணைகளுமின்றி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -