ஏ.எஸ்.எம் ஜாவித்-
கல்வி அபிவிருத்தி மன்றம் வாமி நிறுவனத்துடன் இணைந்து வருடா வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து வருகின்றது.
இந்த வகையில் 11வது தடவையாகவும் 2014ஆம் ஆண்டில் மேற்படி நிறுவனத்தில் பதிவு செய்து அந்நிறுவனத்தால் நடாத்தப்பட்ட பரீட்சைகளில் தோற்றி பின்னர் அரச புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (16) கொழும்பு டவர் மண்டபத்தில் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் எஸ்.எல்.மன்சூர் தலைமையில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் நாடளாவிய ரீதியில் சித்தியடைந்த மூவினத்தையும் சேர்ந்த சுமார் 650 மாணவ, மாணவிகளுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், விஷேட பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படதுடன் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற ஸாஹிராக் கல்லூரி மாணவியான எம்.என்.எப். ஷமாஹ் (197 புள்ளிகள்) இருபத்தி ஐயிரம் ரூபா பணப்பரிசு. கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்யவதற்கான பண வவுச்சர்கள், மற்றும் விஷேட பரில்கள் வழங்கப்பட்டதுடன் அவர் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்படார். இவருடன் சேர்ந்து அதி மூடிய புள்ளிகளைப் பெற்ற 11 பேருக்கும் விஷேட பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படதுடன் அதி கூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலைகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜ்மன் ஷாஹிட் உட்பட நிறுவனத்திற்கு உதவி நல்கிய நலன் விரும்பிகள், பாடசாலை அதிபர்கள், புத்தி ஜீவிகள். குல்விமான்கள் என பெருந்திரலானவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாண, மாணவிகளின் தகவல்கள் அடங்கிய புலமைத் தாரகை எனும் நினைவு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அல்-ஹிக்மா பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.றி
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)