ஹட்டனிலிருந்து கண்டி செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் இன்று (31) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (30) கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ் ஒன்றினை கினிகத்தேனை அம்பகமுவ பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த சிலர் மறித்து நடத்துனரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதனால் அவர் தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், இதுவைர சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என கோரியே இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
எனினும் இவ் விடயம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சந்தேகநபர்களை கைது செய்யவுள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.