எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை, சென்னல் கிராமம் -2 பிரிவு சஹான பென்கள் அபிவிருத்தி சங்கத்தின் அபிவிருத்தி தெடர்பான கலந்துறையாடல் நேற்று சனிக்கிழமை அமைப்பின் வளாகத்தில் தலைவி ஏ.எம்.சித்தி சகீதா தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துறையாடலுக்கு சஹான பென்கள் அபிவிருத்தி சங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களை அழைத்து சங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெரிவித்தனர்.
இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக மகளிர் சங்க பிரதிநிகளிடம் வாக்குறுதியளித்தார். மகளிர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், கிராமத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


