திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

ட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய இரு பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகளில் நாளாந்தம் சேர்க்கப்படும் கழிவுகளை சேதனைப் பசளையாக மாற்றும் திட்டத்தில் அமைக்கப்படவுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் சூடுபத்தினசேனை பிரதேசத்தில் இடம் பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக யூனப்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சிமேநீடா சீலிகாடோ (ளுiஅழநெவவய ளுடைபையவழ), மட்டக்களப்பு உள்ளுராட்சி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.எம்.ஷாபி, பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை கோறளைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபை பிரிவிற்குள்ளும் நாளாந்தம் சேர்க்கப்படும் பத்து தொடக்கம் பதினைந்து டொன் குப்பைகளால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தது. இனி வரும் காலங்களில் நாளாந்தம் சேர்க்கப்படும் குப்பைகளை திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ் சேதனைப்பசளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளதால் பிரதேச சபைக்கு வருமானம் கிடைக்கவுள்ளதுடன், பிரதேச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கவுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கான கட்டிடம் அமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் யூனப்ஸ் (UNOPS) நிறுவனத்தின் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -