இது பற்றி அக்கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
பல வருடங்களாக மியான்மார் எனும் பர்மா முஸ்லிம்கள் அந்நாட்டு ஆட்சியாளர்களால் பாரிய கொடுமைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். இது பௌத்த மதத்துக்கும் பாரிய அபகீர்த்தியை உண்டாக்குகிறது என்பதே உண்மையானதாகும்.
அம்மக்கள் பாரிய இனஅழிப்புக்கும் மனிதாபிமானமற்ற, கொடூரமான தாக்குதல்களுக்கும் முகம் கொடுப்பதையும், இவற்றை தாங்க முடியாமல் நாட்டிலிருந்து வெளியேறி கடலில் தத்தளிப்பதையும் சர்வதேச ஊடகங்கள் தெளிவு படுத்துகின்றன.
இலங்கையில் நடைபெற்ற போராட்ட இறுதிக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி பாரிய அளவில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ நா அப்பாவி பர்மா முஸ்லிம்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளாமலிருப்பது கவலைக்குரியதாகும்.
ஆகவே இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் இம்மக்களுக்காக குரல் கொடுப்பது அவசியமாகும். நமக்கு ஏதும் துன்பங்கள் நடக்கும் போது ஏனைய நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என எதிர் பாhக்கும் நாம் இது விடயத்தில் மௌனமாக இருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
