கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதிகமானவர்கள் இருப்பதால் பாராளுமன்றத்தில் தனக்கு ஆசனம் கிடைக்காமல் போய்விடும் என்ற எண்ணத்தில் மாற்று அணியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நம்பகமான வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர் மாற்று கட்சியில் இணையும் பட்சத்தில் தான் மாகாணசபையில் பெற்ற வாக்கில் 6இல் ஒரு பங்கினைத்தான் பெற்றுக்கொள்வார் என்றும், கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ.மு.கா.கட்சிக்காக மக்கள் வழங்கிய வாக்கில் தான் வெற்றி பெற்று வந்ததனை மறந்து விட்டார் என்றும், மாற்று அணியுடன் இணைந்தால் இருப்பதனையும் இளக்க நேரிடும் என்றும் அவதானி கருத்து வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர் யார் என்பதனை அவதானி கூற மறுத்ததுடன் இன்னும் சில தினங்களில் யார் அந்த மாகாண சபை உறுப்பினர் என்று அறிவிக்கப்படும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.
