ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராக இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபா, தற்போதைய அரசாங்கத்தின் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
முஸ்தபா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சராக பணியாற்றினார். முஸ்தபா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.ச
