ஞான சார 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று கறுவாத்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 13ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார் கலகொடஅத்தே ஞானசார தேரரின், காவி உடையைக்கு மதிப்பளித்தே பிணை வழங்குவதாக கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார்.

அவரை ஒரு பிரஜையாக கருத்திற்கொள்ளவில்லை,

இதன்பின்னர் நீதிமன்றத்தை உத்தரவை மதித்து நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிபதி ஞானசார தேரருக்கு எச்சரித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலஞச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிப்பு தெரிவித்து அண்மையில் நீதிமன்ற உத்தரவை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், உத்தரவிட்ட தினத்தில் ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனால், அவரைக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஜப்பான் சென்றிருந்த ஞானசார தேரர் நேற்று நாடு திரும்பிய நிலையில் கறுவாத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமொன்றை வழங்கியிருந்தார்.

பின்னர் இன்று பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  இதன்போதே அவருக்கு நீதவான் இவ்வாறான அறிவுறுத்தலுடன் பிணை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -