அனைத்து பாடசாலைகளிலும் வித்தியாவுக்காக அஞ்சலி!

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நாடெங்கிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், நாளை காலை ஒரு நிமிட அஞ்சலி செலுத்துமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர், மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளதாவது-

“அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை காலைப் பிரார்த்தனையின் போது மாணவி வித்தியாவுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். இந்தக் கொடூர சம்பவத்துக்கு எதிராக ஒவ்வொருவரும் தமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தக் கொடிய செயலைக் கண்டித்து, வரும் 28ம் நாள் கோட்டே தொடருந்து நிலையத்துக்கு முன்பாக ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும், பாடசாலை மாணவியின் மரணத்தை வைத்த சில அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயம் தேடவும், இனவாதத்தை தூண்டிவிடவும், பயன்படுத்துவதையும் நாம் கண்டிக்கிறோம்.இதனை அரசியலுக்குப் பயன்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -