மியன்மாரில் இருந்து தப்பிச் செல்லும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் உள்ளிட்ட ஆசிய சட்டவிரோத குடியேற்ற வாசிகள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் இந்த கலந்துரையாடல் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன்பொருட்டு பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்குகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மியன்மார் மாத்திரம் அன்றி பங்களாதேஸில் இருந்தும் அகதிகள் தப்பிச் செல்பவர்கள் தாய்லாந்து, இந்தோனேசிய மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.
இந்த நிலையில், இன்று இடம்பெறும் இந்த கலந்துரையடலில் இலங்கை உள்ளிட்ட 17 நாடுகள் பங்குகொள்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ச
