மஹிந்த ராஜபக்ஷவை விடமாட்டேன் - ஜனாதிபதி மைத்திரி

பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார் பில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்தராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்பது உட்பட நான்கு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் விரி வான பேச்சு நடத்தினர்.இதன் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் வேட்பாளராக எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கவேண்டும். இதன் மூலமே கட்சியின் ஒற்றுமையினை கட்டிக்காக்க முடியும் என்று கூட்டுக்கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தினர். 

இதன் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர் வெற்றி பெற்று பிரதமராக வந்த பின்னர் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியும். திரும்பவும் அவர் ஜனாதிபதியாக முயல்வார்.

கட்சியின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கு நான் தயாராக உள்ளேன். அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியினை வெற்றிபெறச் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடலாம். 

அவருடன் இணைந்து பிரசாரத்தை மேற்கொண்டு கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு நான் தயாராக உள்ளேன். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அனைத்து பங்காளிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமான கூட்டணியாக களமிறங்குவது, தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -