சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதாக கூறி, வியன்னா விமான நிலையத்திலுள்ள சில பாதுகாப்பு ஊழியர்கள் ஒஸ்ட்ரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு சட்டவிரோதமாக ஆட்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 பேரிடம் இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரதானமாக ஒஸ்ட்ரியா விமான நிலையத்தில் கடமையாற்றும் இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா பிரஜைகள் மீதே சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை அழைத்துச் செல்ல 7000 முதல் 9000 யூரோக்கள் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
